ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: இறுதி போட்டியில் புனேவுடன் மோதுகிறது மும்பை

வெள்ளி, 19 மே 2017 (23:06 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் புனே அணியுடன் மோதும் அணி எது என்பதை தேர்வு செய்யும் முக்கிய போட்டி இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின 


டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. எனவே முதலில் களத்தில் இறங்கிய கொல்கத்தா ஆரம்பம் முதலே தடுமாறியது. அந்த அணியின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்ததால் 18.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

எனவே 108 ரன்கள் எடுத்தாலே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை மும்பை மீண்டும் பெற்றுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஐபிஎல்10 - மும்பை பந்துவீச்சில் சிதறிய கொல்கத்தா