Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 முறை சாம்பியன்ஸ்…என்ன ஆச்சு?... மும்பை இந்தியன்ஸ் படைத்த மிக மோசமான சாதனை!

5 முறை சாம்பியன்ஸ்…என்ன ஆச்சு?...  மும்பை இந்தியன்ஸ் படைத்த மிக மோசமான சாதனை!
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (08:54 IST)
ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி அதிக முறை கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே கவனிக்கப்படும் ஒரு அணியாக இருந்து வருகிறது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா தலைமையில் இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு சீசன் அவர்களுக்கு மிகவும் மோசமாக அமைந்துள்ளது.

இந்த சீசனில் அவர்கள் இதுவரை விளையாடிய முதல் 7 போட்டிகளையும் இழந்துள்ளனர். இதுவரை ஐபிஎல் தொடரில் எந்தவொரு அணியுமே இதுபோல தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டு ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொல்லார்ட் விக்கெட்டை எடுக்க மாஸ்டர் ப்ளான் போட்ட தோனி!