ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இந்தூரில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் முதலில் பஞ்சாப் அணி களமிறங்கியது. மிக அபாரமாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா, சதமடித்து அசத்தினார். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 198 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
199 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி15.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து அசால்ட்டாக வெற்றி பெற்றது. மும்பை அணியின் ராணா 62 ரன்களும், பட்லர் 77 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை மொத்தம் 10 புள்ளிகளுடன் அசைக்க முடியாத முதல் இடத்தில் உள்ளது.