புரோ கபடி 2018: மும்பை, உபி அணிகள் வெற்றி

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (22:47 IST)
கடந்த இரண்டு மாதங்களாக புரோ கபடி லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் உபி அணிகள் வெற்றி பெற்றன

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மும்பை அணி டெல்லி அணியுடன் மோதியது. ஆரம்பம் முதலே மும்பை அணியின் கை ஓங்கியிருந்தது. அந்த அணி எந்த நிலையிலும் புள்ளிகளின் பின்வாங்கவே இல்லை. இறுதியில் 44-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் உபி அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டி இரு அணி வீரர்களுக்கும் சவாலாக இருந்தாலும் உபி அணி இறுதியில் 27-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய நிலையில் ஏ பிரிவில் 77 புள்ளிகளுடன் மும்பை முதலிடத்திலும், 73 புள்ளிகள் பெற்று குஜராத் 2வது இடத்திலும், 60 புள்ளிகளுடன் டெல்லி அணி 3வது இடத்திலும் உள்ளது. அதேபோல் பி பிரிவில் 59 புள்ளிகளுடன் பெங்களூரு முதலிடத்திலும், 51 புள்ளிகள் பெற்று பாட்னா 2வது இடத்திலும், 44 புள்ளிகளுடன் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments