புரோ கபடி 2018: டெல்லி, ஹரியானா அணிகள் வெற்றி

புதன், 5 டிசம்பர் 2018 (22:34 IST)
கடந்த சில வாரங்களாக 2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஹரியானா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன

இன்றைய முதல் ஆட்டத்தில் ஹரியானா அணி பெங்கால் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சம அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதால் எந்த அணி வெற்றி பெறும் என்று கடைசி நிமிடம் வரை கணிக்க முடியாமல் இருந்தது. இறுதியில் ஹரியானா அணி 35-33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வென்றது

இதேபோல் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும் யார் வெற்றி பெறுவார் என்ற த்ரில் கடைசி வரை இருந்தது. இறுதியில் டெல்லி அணி 32-31 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரை வென்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கிரிக்கெட் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த "விராட் கோலி"!