Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகளை நிறைவு செய்த மிதாலி ராஜ் – நெட்டிசனின் கிண்டலுக்குப் பதில் !

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (14:23 IST)
இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 20 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை அடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் நடந்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விளையாடிய மிதாலி ராஜ் தனது 20 ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்துள்ளார். இதை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சச்சினின் பாராட்டைத் தனது டிவிட்டரில் பகிர்ந்தார் மிதாலி ராஜ். அதில் கமெண்ட் இட்ட ஒருவர் ‘இவருக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் மட்டும் பேசுவார்’ எனக் கிண்டல் செய்யும் தொனியில் கருத்துத் தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளித்த மிதாலி ராஜ் ‘தமிழ் என் தாய்மொழி.. நான் நன்றாகத் தமிழ் பேசுவேன். தமிழராய் வாழ்வது எனக்குப் பெருமை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நான் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன்.’ எனப் பதில் கூறியுள்ளார். மிதாலி ராஜ் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments