Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிஸ்யூ அஸ்வின்...இணையதளத்தில் டிரெண்டிங்

Advertiesment
மிஸ்யூ அஸ்வின்...இணையதளத்தில் டிரெண்டிங்
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (18:52 IST)
நேற்று ஓவலில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.  

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் நான்காவது போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் அணியில் முக்கிய மாற்றமாக அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது பல முனைகளில் இருந்தும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் ‘இது சுத்த பைத்தியக்காரத்தனம். 413 டெஸ்ட் விக்கெட், 5 டெஸ்ட் சதங்கள் எடுத்தவர் அஷ்வின். #பைத்தியக்காரத்தனம்’ எனக் கூறியுள்ளார்.

மேலும், அடுத்த டெஸ்ட் போட்டியிலாவது அனுபவ வீரரான அஸ்வினை கேப்டன் விராட் கோலி பயன்படுத்துவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சிறந்த பந்துவீச்சாளரான அஸ்வினை அடுத்த போட்டியில் பயன்படுத்தினால் இந்திய அணிக்குச் சாதமாக அமையலாம் எனவும் நெட்டிசன்ஸ் கருத்துத் தெரிவித்து இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.  
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆறாவது விக்கெட்டுக்கு நங்கூரம் பாய்ச்சிய இங்கிலாந்து வீரர்கள்… மளமளவென உயரும் ஸ்கோர்!