Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது முடிவு இல்ல.. இனிமேதான் ஆரம்பம்! மெஸ்சி வெளியிட்ட ஆச்சர்ய அறிவிப்பு!

Advertiesment
Leonal Messi
, திங்கள், 19 டிசம்பர் 2022 (10:11 IST)
உலகமே ஆவலுடன் பார்த்திருந்த பிபா உலகக்கோப்பையில் அர்ஜெண்டினா கோப்பையை வென்ற நிலையில் மெஸ்சி ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டி இந்த ஆண்டு கத்தாரில் தொடங்கி நடந்தது. பரபரப்பான போட்டிகளின் இறுதியில் நேற்று பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் மோதிக் கொண்டன.

மிகவும் விருவிருப்பாக சென்ற இந்த போட்டியில் 2-2 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தததால் கூடுதல் நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு பின் அர்ஜெண்டினா கோப்பையை வென்றது. லியோனல் மெஸ்சி அர்ஜெண்டினாவுக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்திருந்தாலும், ஃபிஃபா கோப்பையை வெல்வது இதுவே முதல்முறை.

இந்த உலகக்கோப்பைக்கு பிறகு மெஸ்சி விளையாட மாட்டார் என பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் கோப்பையை வென்ற மெஸ்சி சாம்பியனாக மேலும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மெஸ்சி தொடர்ந்து விளையாட உள்ளதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்வி அடைந்தாலும் பிரான்ஸ் வீரர் எம்பாபேவுக்கு குவியும் பாராட்டு!