Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹுவெண்டஸ் அணியிலிருந்து மாறுகிறாரா ரொனால்டோ? – டீல் பேசும் மான்செஸ்டர்!

Advertiesment
Ronaldo
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:49 IST)
பிரபல போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோவை தங்கள் அணியில் சேர்க்க மான்செஸ்டர் சிட்டி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான கால்பந்து விளையாட்டு வீரர்களில் முன்னனியில் இருப்பவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் க்ளப் ஆட்டங்களில் சிரி ஏ போன்ற போட்டிகளில் ஹுவண்டெஸ் எஃப்.சிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ரொனால்டோவை இரண்டு வருட ஒப்பந்தத்தில் தங்கள் அணியில் சேர்க்க இங்கிலாந்து கால்பந்து க்ளப்பான மேன்சிட்டி எனப்படும் மான்செஸ்டர் சிட்டி க்ளப் முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ரொனால்டோவுக்கு வாரத்திற்கு 2.30 லட்சம் யூரோக்கள் என்ற கணக்கில் டீல் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் லியோனல் மெஸ்சி அணி மாறியது போல ரொனால்டோவும் மாறுவாரா என எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டும் இலங்கை கிரிக்கெட் வீரர்!