Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி: அதிரடி அறிவிப்பு!

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி: அதிரடி அறிவிப்பு!
, வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (08:51 IST)
டோக்கியோவில் நடைபெற்ற முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்தது என்பதை ஏற்கனவே அறிந்ததே
 
அந்த வகையில் இந்தியாவிற்காக ஒலிம்பிக் குத்துசண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று கொடுத்தவர் லவ்லினா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் டோக்கியோவில் இன்று இந்தியா திரும்பியபோது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அசாம் மாநிலத்திற்கு வருகை தந்த லவ்லினாவை அம்மாநில முதலமைச்சர் வரவேற்பு அளித்தார். அதுமட்டுமின்றி ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை மற்றும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவியை ஆகியவையும் ஒலிம்பிக் வீராங்கனை லவ்லினாவுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதில் கண்டிப்பாக தங்கம் வெல்வேன் என்றும் லவ்லினா தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.எல்.ராகுல் அசத்தல் சதம்: வலுவான ஸ்கோர் எடுத்த இந்தியா!