ஐபிஎல் தொடரில் இன்றைய முதல் ஆட்டத்தில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து 196 என்ற இமாலய இலக்கை நோக்கிய விளையாடிய டெல்லி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
இதனை அடுத்து புள்ளி பட்டியலில் தற்போது 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் லக்னோ உள்ளது
இந்த தொடரில் அறிமுக அணியாக உள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள்தான் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது