Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம் : கோலி பேட்டி

Advertiesment
அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம் : கோலி பேட்டி
, ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (18:16 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் அடுத்து நடந்த ஒருநாள்  போட்டிகளில் முழு  கவனம் செலுத்தி விளையாடியது.அதில்  சர்வதேச போட்டிகளில் முதலிடத்தில் உள்ள பலம் வாய்ந்த  இந்திய அணியை எதிர்கொண்ட  மேற்கிந்திய தீவுகள்  அணி முதலிரண்டிகளில் ஒன்றில் டையிலும் மற்றொன்றில் இந்திய அணியும் வென்றுள்ளது. 
 
எனவே மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி மிகத்திறமையாக விளையாடியது.
 
அதனால் நேற்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவிகள்  அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
 
இந்திய அணிகேப்டன் கோலிஅடித்த சதம் வீணானது .அணியினர் ஒத்துழைக்காமல் இருந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.
 
இது குறித்து கோலி கூறியாதாவது:
 
’முதல் 35 ஓவர்கள் வரை நாங்கள் நன்றாக் பந்துவீசியும்  பிட்ச் ஒத்துவரவில்லை.அதனால் ரன் எகிறிவிட்டது.ரன்களும் அதிகமாக கொடுத்துவிட்டோம்.
 
திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளதுமேற்கிந்தியதீவுகள் அணி! அவர்கள் அடித்து ஆடக்கூடியவர்கள் அதனால் இந்த போட்டியில் அவர்கள்  வெற்றிபெற்றுள்ளனர்.
 
இந்த போட்டியில் நாங்கள் எதிலெதில்  சிறப்பாக செயப்படவில்லையோ அடுத்தமுறை அதை செயல்படுத்துவோம்.இன்னும் கவனமுடன் விளையாடுவோம்.’இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்தமனத்தில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை