Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2018: கொல்கத்தா - ராஜஸ்தான் இன்று மோதல்!

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (11:11 IST)
ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுவும், ப்ளே ஆப் சுற்றுக்கள் நெருங்கி வரும் நிலையில், அணிகள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
 
ஏர்கனவே, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், அடுத்த இரண்டு அணிகள் யார் யார் என்பதற்கான கடும் போட்டி நிலவி வருகிறது. 
 
அதன்படி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இதுவரை தலா 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி கண்டு 12 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.
 
இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வி காணும் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விகுறியாகும். வெற்றி பெறும் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும் பட்சத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது. 
 
ஐபிஎல் போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதி இருக்கின்றன. ராஜஸ்தான் அணி 9 வெற்றிகளுடனும், கொல்கத்தா அணி 7 வெற்றிகளுடனும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments