Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாபர் ஆஸம்மை பார்த்து கோலி கற்றுக்கொள்ள வேண்டும் – பாக் பவுலர் சர்ச்சை கருத்து!

பாபர் ஆஸம்மை பார்த்து கோலி கற்றுக்கொள்ள வேண்டும் – பாக் பவுலர் சர்ச்சை கருத்து!
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (12:32 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி சில ஷாட்களை பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம்மை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என பாக் முன்னாள் வீரர் அக்யுப் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இன்றைய கிரிக்கெட் வீரர்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து விதமான போட்டிகளிலும் 50க்கும் மேல் சராசரி வைத்து நம்பர் 1 பேட்ஸ்மேனாக கோலி விளங்குகிறார். அவரை இளம் வீர்ரகள் முன்னுதாரணமாகக் கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பாக் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அக்யுப் ஜாவித் ‘கோலி சில தொழில்நுட்பங்களில் பின் தங்கியுள்ளார். அவரை விட பாபர் ஆஸம் சிறப்பாக செயல்படுகிறார். ஆஃப் சைடில் எப்படி விளையாடுவது என கோலி பாபர் ஆஸமிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதே போல உடலை எவ்வாறு பேணவேண்டும் என்பதை கோலியிடம் இருந்து பாபர் ஆசம் கற்றுக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி வரை போராடிய மணிஷ் பாண்டே: ஐதராபாத் அணி தோல்வி