இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் அசத்தி வருகிறார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது.
இதில் கோலி மற்றும் புஜாரா சதம் அடித்தனர். கோலி 151 ரன்களுடனும், புஜாரா 119 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் கோலி மேலும் 49 ரன்கள் எடுத்து இரட்டை சதம் அடித்தால் ஒரே வருடத்தில் மூன்று இரட்டை சதங்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த கோலி, கடந்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டெஸ்டிலும் இரட்டை சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 157 ரன்கள் எடுத்துள்ள கோலி இரட்டை சதம் விளாசி புதிய சாதனை படைக்க காத்திருக்கிறார்.