Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாக்ஸிங் டே வெற்றி… இந்திய அணியைப் பாராட்டித் தள்ளிய கோலி!

பாக்ஸிங் டே வெற்றி… இந்திய அணியைப் பாராட்டித் தள்ளிய கோலி!
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:52 IST)
இந்திய அணியின் கேப்டன் தற்காலிக கேப்டன் ரஹானே மற்றும் இந்திய அணியினரைப் பாராட்டி டிவீட் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி கேப்டன் ரஹானேவின் சதத்தால் 326 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து ஆடிய ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 200 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதையடுத்து இந்திய அணி வெற்றிக்கு தேவையான 70 ரன்களை 2 விக்கெட்களை மட்டுமே இழந்து எடுத்தது. இதன்மூலம் அடிலெய்ட் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய வீரர்களுக்கும் குறிப்பாக கேப்டன் ரஹானேவுக்கும் பல முனைகளில் இருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவுக்கு திரும்பியுள்ள கேப்டன் கோலி இந்த வெற்றி குறித்து டிவிட்டரில் ‘ என்ன வெற்றி?! ஒட்டுமொத்த அணியின் வெற்றிக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ரஹானே சிறப்பாக அணியை வழிநடத்திச் சென்றார். இந்த இடத்தில் இருந்து மேலும் முன்னேறி செல்ல வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிக்குப் பின் அறிமுக வீரர்களைப் பாராட்டிய ரஹானே!