இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இரு அணி வீரர்களின் சீண்டல் தொடர்ந்து வருகிறது.
போட்டியின் 3 வது நாள் ஆட்டத்தின் போது பந்தை பவுண்டரி அருகே பாய்ந்து விழுந்து தடுத்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், காயமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலியை போன்று தோள் பட்டையை பிடித்துக்கொண்டு வலிப்பது போல் நடித்து கோலியை கிண்டல் செய்தார்.
இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி தக்க பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 14 ரன்களில் ஆட்டம் இழந்த போது அவரை வெறுப்பேற்றும் விதமாக தனது தோள் பட்டையை தட்டி, என்னையா கிண்டல் செய்தீர்கள் என்ற விதத்தில் மகிழ்ச்சியை கொண்டாடினார்.