Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் களத்தில் இறங்கும் சேவாக், விராத் கோஹ்லியின் குடும்ப வாரிசுகள்..! ஏலப்பட்டியலில் இடம்..!

Siva
திங்கள், 30 ஜூன் 2025 (16:32 IST)
வருகிற ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் டெல்லி பிரீமியர் லீக்  ஏலத்தில், கிரிக்கெட் உலகின் சில பிரபலமான குடும்பங்களை சேர்ந்த இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். விராட் கோலியின் அண்ணன் விகாஸ் கோலியின் மகன் ஆர்யாவீர் கோலி மற்றும் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யாவீர் சேவாக் ஆகியோர் ஏலப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
 
ஆர்யாவீர் சேவாக், டெல்லி 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேகாலயாவுக்கு எதிராக 297 ரன்கள் குவித்து அசத்தியவர். அவரது இளைய சகோதரர் வேதாந்த் சேவாக் டெல்லி 16 வயதுக்குட்பட்டோர் அணிக்காக ஆஃப்-ஸ்பின்னராக விளையாடுகிறார். ஆர்யாவீர் கோலி ஒரு லெக் ஸ்பின்னர். அவர் விராத் கோஹ்லி போலவே ராஜ்குமார் சர்மாவிடம் பயிற்சி பெறுகிறார். கடந்த சீசனில் டெல்லி 16 வயதுக்குட்பட்டோர் அணியில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
 
இந்த ஆண்டு டெல்லி பிரீமியர் லீக்கில் அவுட்டர் டெல்லி மற்றும் புது டெல்லி என இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2024 DPL T20 போட்டியில், ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டிகளில் ஆயுஷ் படோனி, அனுஜ் ராவத், ரிஷப் பந்த் போன்ற பிரபல வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் களத்தில் இறங்கும் சேவாக், விராத் கோஹ்லியின் குடும்ப வாரிசுகள்..! ஏலப்பட்டியலில் இடம்..!

பார்ட் டைம் வேலை பார்க்க மறுத்த வினோத் காம்ப்ளி.. என்ன காரணம்?

இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் இருக்க மாட்டார்களா?... பின்னணி என்ன?

உலகிலேயே முதல் கிரிக்கெட் வீரர்: ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் செய்த அசத்தலான சாதனை

இந்திய அணி பும்ராவையே அதிகம் சார்ந்துள்ளது… அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் தேவை- அசாருதீன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments