உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழவே நான் எப்போதும் விரும்புகிறேன் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் முழுதுமே நான் எப்படி ஆடுகிறேன் என்பது பற்றிய விமர்சனங்களைச் சந்தித்து வந்துள்ளேன்.
இப்போதும் கூட என்னைச் சந்தேகிப்பவர்களும், என்னைப் பிடிக்காதவர்களும் உள்ளனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, நான் என் திறமை மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
கிரிக்கெட் வீரராக ஒவ்வொருவருக்குமே திருப்பு முனை ஆண்டு என்ற ஒன்று உண்டு. 2015 பிற்பகுதி தொடங்கி 2016 முடிவு வரை எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய ஆண்டு என்றே கருதுகிறேன் என் கோலி தெரிவித்துள்ளார்.