டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக எனது திறமையை மதிப்பிட அதற்குள் இப்போது என்ன அவசரம் என்று விராட் கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது கேப்டன் பதவி குறித்து கோலி பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் என்னை மதிப்பீடு செய்ய மாட்டேன். போட்டிகளில் வெற்றி பெறுவதையே முதல் குறிக்கோளாக வைத்துள்ளேன்.
விளையாட்டு மட்டுமல்ல எந்த அணியாக இருந்தாலும் அந்த அணியின் செயல்பாடை பொறுத்தே அதன் கேப்டனின் திறமையும் மதிப்பிடப்படும். அணி சரியாக ஆடாத போது தலைமைத்துவம் என்பது கட்டுப்பாட்டை இழக்கும்.
எனவே இந்திய அணியின் கேப்டனாக அடுத்த 5 முதல் 8 ஆண்டுகளுக்கு நானே தொடர்ந்தால் எனது தலைமைத்துவத்தை மதிப்பீடு செய்வேன். இப்பொழுது என்னை மதிப்பிடுவதற்கான நேரம் வரவில்லை என தெரிவித்துள்ளார்.