தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர் வெற்றி – ஆஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்து இந்தியா உலக சாதனை !

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (08:06 IST)
2013க்குப் பிறகு உள்நாட்டில் நடந்த 11 டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இந்திய அணி உலக சாதனைப் படைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த தொடர் வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து 11 ஆவது முறையாக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற 32 டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் மற்ற போட்டிகள் டிராவும் ஆகியுள்ளன. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா 10 டெஸ்ட் தொடர்களை சொந்த நாட்டில் வென்றுள்ளது. அந்த சாதனையை இப்போது கோலி தலைமையிலான இந்திய அணி முறித்துள்ளது. கோலி தலைமையேற்ற போது இந்திய அணி டெஸ்ட் அரங்கில் 7 ஆவது இடத்தில் இருந்தது. தற்போது இரண்டு ஆண்டு காலமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments