ஐபிஎல் 2018 இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியிக் கொல்கத்தா - டெல்லி அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் காளமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது.
ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். ஆண்ட்ரூ ரஸல் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 12 பந்துகளில் 6 சிக்ஸருடன் 41 குவித்தார்.
இதன்மூலம் கொல்கத்தா அணி எளிதாக 200 ரன்களை எட்டியது.