கே.கே.ஆர் அணிக்குப் புதிய பயிற்சியாளர் – பிரண்டம் மெக்கல்லம் பொறுப்பு !

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (10:02 IST)
கே.கே. ஆர் அணியின் உதவிப்பயிற்சியாளராக நியுசிலாந்து அணியின் பிரண்ட்டம் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கே கே ஆர் அணி ஐபிஎல் போட்டிகளில் இரண்டு முறைக் கோப்பையினை வென்ற அணி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக முறையான பார்ம் இல்லாமல் லீக் சுற்றுகளை தாண்டாமல் உள்ளது. இந்நிலையில் அணியின் நிர்வாகத்தில் புதிதாக சில மாற்றங்களை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதன் படி அணியின் உதவிப் பயிற்சியாளராக நியுசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்ட்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல் 5 சீசன்களில் அந்த அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2009 ஆம் ஆண்டு அந்த அணிக்குக் கேப்டனாகவும் செயல்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேசப் போட்டிகள் இருந்து ஓய்வு பெற்ற அவர் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். தற்போது அனைத்து வகையிலானப் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

மொத்தமா முடிச்சு விட்டாங்க… கவுகாத்தி டெஸ்ட்டில் தோற்று வொயிட்வாஷ் ஆன இந்தியா!

2வது இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

ஸ்மிருதி தந்தை டிஸ்சார்ஜ்.. ஆனால் திருமண மறுதேதி அறிவிப்பு இல்லை.. என்ன நடக்குது?

5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறும் இந்தியா! ஜடேஜா - சாய் சுதர்சன் டிரா செய்வார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments