Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொம்ப கொண்டாட வேண்டாம், இனிமேல் தான் ரியல் டீமுடன் மோத உள்ளீர்கள்: கெவின் பீட்டர்சன் நக்கல்

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (14:14 IST)
இனிமேல் தான் ரியல் டீமுடன் மோத உள்ளீர்கள்: கெவின் பீட்டர்சன் நக்கல்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி உள்ளது என்பதும் இந்த கொண்டாட்டத்தை இந்திய வீரர்கள் கொண்டாடி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த கொண்டாட்டத்தை ரொம்ப கொண்டாட வேண்டாம் என்றும் இனிமேல் தான் ரியல் அணியுடன் உண்மையான ஆட்டமே இருக்கிறது என்றும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்
 
இன்னும் ஒரு சில வாரங்களில் ரியல் டீம் உங்கள் நாட்டிற்கு வர போகிறது என்றும் உங்கள் இடத்தில் வைத்தே உங்களை தோற்கடிப்போம் என்றும் அதனால் ரொம்ப கொண்டாட வேண்டாம் அலர்ட்டாக இருக்கவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இதனை சுட்டிக்காட்டி கிண்டல் செய்து டுவிட்டை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இருப்பினும் இந்திய ரசிகர்கள் கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க தெரிந்த எங்களுக்கு எங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்தை தோற்கடிக்க தெரியாதா என்று கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments