விளையாட்டு வீரர்களின் பணம் மற்றும் உபகரணங்களை திருடிய வழக்கில் கென்யாவின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் பென் எகும்போ கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொண்ட ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் வீரர்களை வழிநடத்த ஒரு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
அவர்களிடம் வீரர்களுக்கான ஊக்கத் தொகை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி ஒப்படைக்கப்படும். அதேபோல் கென்யா நாடு சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதில் ஊழல் செய்ததாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக கென்யா அரசு விசாரணை நடத்தினர். இதில் அந்நாட்டின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி துணைத் தலைவர் பென் எகும்போவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கமிட்டி தலைவர் 2 லட்சத்துக்கு 50 ஆயிரம் டாலர் வரை திடுடியதாக கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.