Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் கண் அசைவில் விக்கெட் விழும்: கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி!!

Webdunia
சனி, 17 ஜூன் 2017 (12:19 IST)
வங்கதேச அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில், தோனியின் கண் அசைவுக்கு ஏற்ப பவுலிங் செய்தேன் என இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.


 
 
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை இந்தியா பாகிஸ்தான் மோதும் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
 
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் கேதர் ஜாதவ், திடீர் ஹீரோவாக உருவெடுத்தார். ஆனால் இதற்கு காரணம் தோனி தான் என தெரிவித்துள்ளார். 
 
ஜாதவ் கூறுகையில், துவக்கத்தில் என்னுடைய பவுலிங்கை பேட்ஸ்மேன் கணிக்க துவங்கினார். இதை கவனித்த தோனி, என்னிடம் வந்து எந்த லைனில் பவுலிங் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். 
 
அதன் பின்னர் பேட்ஸ்மேனுக்கு பின்னால் இருந்து தனது கண்களால் சைகை காட்டினார். தோனியின் கண் அசைவில் தான் எனக்கு விக்கெட்கள் விழுந்தது. அவரின் அனுபவம் மிகவும் விலை மதிப்பு இல்லாதது என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments