Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குணமாகிய பின்னர் கோஃல்ப் விளையாடிய கபில்தேவ்: வைரலாகும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:35 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்தியாவிற்கு முதல் முதலாக உலக கோப்பை பெற்று தந்தவருமான கபில்தேவ் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்., அதன் பின்னர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் பலனாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார் 
 
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கபில்தேவ் அவர்களுக்கு முன்னால், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கபில்தேவ் குணமாகி வீட்டிற்கு வந்த பின்னர் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் முன்பு மாதிரியே அவர் அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் சற்று முன்னர் கபில்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் கோஃல்ப் விளையாடுவது போன்ற வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.அந்த வீடியோவில் அவர் சுறுசுறுப்பாக கோல்ஃப் விளையாடும் காட்சிகள் உள்ளன. இதனை அடுத்து அவர் மீண்டும் முற்றிலும் குணமாகி சுறுசுறுப்பாக உள்ளது உறுதியாகின்றது. இந்த வீடியோ தற்போது கபில்தேவ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments