Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஷான் கிஷன் வந்துவிட்டார்…. இனி தவான் என்னுடன் கால்ப் விளையாட வேண்டியதுதான் – கபில்தேவ் பதில்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (12:01 IST)
ஏற்கனவே இந்திய அணியில் ரோஹித், ராகுல், தவான் ஆகிய மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இப்போது இஷான் கிஷானும் சிறப்பாக விளையாடியுள்ளதால் நான்காவது தொடக்க ஆட்டக்காரராக இணைந்துள்ளார். இதனால் கேப்டன் கோலிக்கு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்வதில் மேலும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தவானின் இடம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் இஷான் கிஷான் இடதுகை தொடக்க ஆட்டக்காரராக வேறு இருப்பது தவானின் நிலையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ‘இஷான் கிஷான் மற்றொரு இடது கை பேட்ஸ்மேனாக வந்துவிட்டார். இனி தவானுக்கு அங்கு வேலை இருக்காது. பேசாமல் அவர் என்னுடன் வந்து கால்ப் விளையாட வேண்டியதுதான்’ என நகைச்சுவையாகக் கூறியுள்ளார். சமீபத்தில் கபில்தேவ் கால்ப் சங்கத்தில் உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

அடுத்த கட்டுரையில்
Show comments