Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுலுக்கு ப்ரமோஷன் – பஞ்சாப் அணிக்கு கேப்டனாக நியமனம் !

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (08:41 IST)
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே எல் ராகுல் பார்ம் அவுட் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் உள்நாட்டுத் தொடர்களான விஜய் ஹசாரே, துலிப் கோப்பை தொடர்களில் கவனம் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது நடந்துவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரை கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாக நியமனம் செய்துள்ளது அணி நிர்வாகம்.

ஐபிஎல் –ன் 13 ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு செயல்பட்டு வந்த அஸ்வின் டெல்லி அணிக்கு மாறியதால் அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து ராகுலிடம் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான திறமைமிக்க வீரர்கள் இருந்தும் பஞ்சாப் அணியால் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பஞ்சாப் அணியால் 11 கோடி ரூபாய்க்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments