Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலிக்கு இது நல்லது அல்ல: ஜான்சன் விமர்சனம்!!

கோலிக்கு இது நல்லது அல்ல: ஜான்சன் விமர்சனம்!!
, செவ்வாய், 14 மார்ச் 2017 (11:31 IST)
ரன்கள் எடுக்காத காரணத்தினால் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி வெறுப்படைந்துள்ளார் என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார் 


 
 
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
 
இதனால் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் மூலம் மேல் முறையீடு செய்வது குறித்து எதிர்முனையில் இருந்த ஹேண்ட்ஸ்காம்பிடம் ஆலோசித்தார். அதன்பின் ஓய்வறையில் இருந்து ஆலோசனையை எதிர்பார்த்தார் ஸ்மித். 
 
இதற்கு விராத் கோலி மற்றும் கள நடுவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மைதானத்திலிருந்து ஸ்மித் வெளியேற்றப்பட்டார். மேலும் இது போன்ற கள்ளாட்டத்தை ஆஸ்திரேலியா அணியினர் மூன்று முறை பயன்படுத்தியதாக விராத் கோஹ்லி குற்றம்சாட்டினார். 
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய இணையத்தளம் ஒன்றிடம் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியதாவது: இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சிறப்பாக விளையாடுபவர் தான். ஆனால் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் அவர் சரியாக ரன்கள் குவிக்கவில்லை. இதனால் அவர் வெறுப்படைந்துள்ளார். அதனால் தான் அவர் சமீப காலமாக உணர்ச்சி வசப்பட்டு கொண்டு இருக்கிறார். இது நல்லதுக்கு அல்ல. இது போன்ற செயல்களை அவர் நிறுத்திக்கொண்டு கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போல்ட் ஆனதற்கு கூட டி.ஆர்.எஸ் கேட்ட வங்கதேச வீரர்? காமெடியின் உச்சகட்டம்