Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து வீரர் காயம் – விலகலால் இங்கிலாந்துக்குப் பின்னடைவு !

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (17:39 IST)
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய்க்கு இடது தொடையில் ஏறபட்டுள்ள காயத்தால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய்க்குக் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து ஸ்கேன் செய்து பார்த்த போது அவருக்கு இடது தொடையில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஒரு வாரம் அவர் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என சொல்லப்பட்டதை அடுத்து அடுத்து வரும் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.அதன் பின்னர் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த பின்னரே அவர் தொடர்ந்து விளையாடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முத இருக்கும் ஜேசன் ராய் விலகலால் இங்கிலாந்து அணிப் பின்னடைவை சந்தித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments