Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்கர் சாப்பிட்டதினால் தான் பாகிஸ்தான் தோற்றது:கதறி அழுத ரசிகர்

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (16:49 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பர்கர், பீட்ஷா சாப்பிட்டுவதனால் தான் போட்டிகளில் தோற்கிறார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கதறி அழுத பேட்டி ஒன்று  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இங்கிலாந்து நாட்டில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களுக்கு 336 ரன்கள் எடுத்தன.  பின்பு 337 என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடிய போது மழை குறிக்கிட்டதால் 40 ஓவராக குறைக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டமுடியாமல், 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  மேலும் பாகிஸ்தான் அணி புள்ளி விவரப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பர்கரும் பீட்சாவும் சாப்பிடுவதால் தான் அவர்கள் தோற்கிறார்கள் என்று தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேற்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி முடிந்த பிறகு ஒரு தனியார் தொலைகாட்சி நிறுவனம், பாகிஸ்தானின் தோல்வியை குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்டது.

அப்போது ஒரு தீவிர பாகிஸ்தான் ரசிகர், பாகிஸ்தான் வீரர்கள் பர்கர், பீட்சா, ஐஸ் க்ரீம், இனிப்புகள்  போன்றவற்றை சாப்பிடுவதனால் தான் கிரிக்கெட் போட்டிகளில் தோற்கிறார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வெளுத்து வாங்கினார்.

மேலும் அவர், கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ், கொட்டாவி விட்டபோது அவரை கொன்று புதைக்க வேண்டும் போல் தோன்றியது எனவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சஃபராஸ் போட்டியின் போது கொட்டாவி விட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்குள்ளாக்கப் பட்டது.

தற்போது இந்த பாகிஸ்தான் ரசிகரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments