Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

Mahendran

, வெள்ளி, 24 மே 2024 (16:28 IST)
இந்திய அணி பயிற்சியாளராக நியமனம் செய்ய தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்த நிலையில் இந்திய அணி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்பட ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் பிசிசிஐ அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 
 
நானோ அல்லது பிசிசிஐயை சேர்ந்த எந்த அதிகாரிகளோ ஆஸ்திரேலியா வீரர்கள் யாரையும் இந்திய அணியின் பயிற்சியாளருக்காகஅணுகவில்லை என்றும் இது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தவறானது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
இந்திய அணிக்கு சரியான பயிற்சியாளரை கண்டுபிடிப்போம் என்றும் இந்திய அணியை புரிந்து கொண்ட நபரை அடையாளம் காணுவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஆழ்ந்த அறிவு கொண்டிருக்க வேண்டும் என்பதை நாங்கள் வைத்திருக்கும் அளவுகோல் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஒரு பில்லியன் ரசிகர்களின் கனவுகளை நிறைவேற்றக்கூடிய பணி என்பதால் இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியான நபரை விரைவில் பிசிஐ தேர்வு செய்யும் என்றும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய அணி பயிற்சியாளர் ஒரு  இந்தியர் ஆக மட்டுமே இருக்க முடியும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!