Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து பயணத்திற்கு தயாராகும் ஜடேஜா: பயிற்சியை தொடங்கியதாக வீடியோ தகவல்!

Webdunia
வியாழன், 13 மே 2021 (07:21 IST)
இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதி போட்டியில் பங்கேற்க இந்திய அணி விரைவில் இங்கிலாந்து செல்ல உள்ளது. இந்த அணியில் உள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஜடேஜா மீண்டும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்கினார். அதன் பிறகு தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதை அடுத்து அவர் நேற்று முதல் தனது பயிற்சியை தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கொரோனா காரணமாக வீட்டின் அருகிலேயே உள்ள மைதானத்தில் தான் பயிற்சி எடுத்து வருவதாகவும் இங்கிலாந்து செல்ல தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடியை இங்கிலாந்திலும் ஜடேஜா காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments