Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணி: இன்று நடந்தது என்ன?

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (22:45 IST)
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் போட்டியில் இதுவரை தோல்வியையே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணி, இன்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் கடும் சிரமத்துடன் போட்டியை டிரா செய்தது. இதனையடுத்து தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை இன்னும் தக்க வைத்துள்ளது
 
இன்று நடைபெற்ற  நார்த் ஈஸ்ட் அணி மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் 9வது நிமிடத்தில்  நார்த் ஈஸ்ட் அணி ஒரு கோல் போட்டு முன்னணியை தொடங்கியது. ஆனால் 22 நிமிடத்தில் மும்பை ஒரு கோல் போட்டு சமன் செய்ததால் இரு அணி வீரர்களிடையே விறுவிறுப்பு கூடியது
 
அதன்பின் 32வது நிமிடத்தில் மும்பை மீண்டும் ஒரு கோல் போட்டதால்  நார்த் ஈஸ்ட் அணி வீரர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த பத்தே நிமிடத்தில் அதாவது 42வது நிமிடத்தில்  நார்த் ஈஸ்ட் அணி ஒரு கோல் போட்டு மீண்டும் சமன் செய்தது. எனவே முதல் பாதி முடிவின்போது இரு அணிகளும் 2-2 என்ற நிலையில் சமனாக இருந்தது
 
இதன்பின் நடந்த இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் போடாததால் இன்றைய போட்டி டிராவில் முடிந்தது. இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள  நார்த் ஈஸ்ட் அணி இரண்டில் வெற்றியும் மூன்றில் டிராவும் செய்துள்ளது. பெங்களூரு அணியும் இதுவரை தோல்வி அடையாத அணியாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments