இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் பவுலர்களில் ஒருவரான இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது பங்களிப்பு குறித்து பேசியுள்ளார்.
இந்திய அணியைச் சேர்ந்த இஷாந்த் சர்மாதான் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் மூத்தவர். விரைவில் அவர் 100 டெஸ்ட்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார். ஆனால் அவர் இதுவரை வீழ்த்தியது 297 விக்கெட்கள் மட்டுமே. இது சராசரியாக வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கும் விக்கெட்டை விட மிகக்குறைவே.
அண்மையில் இதுபற்றி ஒரு உரையாடலில் பேசியுள்ள இஷாந்த் ‘கேப்டன் என்னிடம் 20 ஓவர்களில் 40 ரன்கள்தான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அதைச் செய்வேன், சுழல் பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை எடுப்பார்கள். அதனால் எனது ஆவ்ரேஜ் 30 க்கும் மேல் உள்ளது. ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. கேப்டன் என்ன செய்ய சொல்கிறாரோ அதை நான் செய்வேன். உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பத் எல்லோரை போலவும் எனக்கும் ஆசை உண்டு’ எனக் கூறியுள்ளார்.