Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டரா? கபில் தேவ் என்ன சொல்கிறார்?

Advertiesment
கபில் தேவ்
, செவ்வாய், 9 ஜனவரி 2018 (21:44 IST)
வேகப்பந்து வீச்சுடன் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையுடைய ஹர்திக் பாண்டியா அடுத்த கபில் தேவ் என்று அழைக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த நைத்து போட்டிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 
 
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டரா? என்பது குறித்து கபில் தேவ் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டர் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். அதற்காக நாம் காத்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும் அவரிடம் உள்ளது. 
 
எந்த ஒரு வீரரும் ஆல்ரவுண்டராக இருந்தால், கேப்டனுக்கு அது சிறந்ததாகவே இருக்கும். தற்போதைய இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது செயல்பட்டதை விட பின்வரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவார்கள் என தெரிகிறது என தெரிவித்துள்ளார். 
 
சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 16 வருடமாக தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் கபில் தேவ். 1978 ஆம் ஆண்டில் இருந்து 1994 ஆம் ஆண்டு வரை கபில் தேவ் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா எதற்கு? கோலி பதில்...