செப்டம்பர் 15 முதல் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்… எந்த நாட்டில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (07:56 IST)
பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதுவரை 29 போட்டிகள் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் எப்படியாவது மீதி போட்டிகளை உலகக்கோப்பை டி 20 போட்டிக்கு முன்னர் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது. போட்டிகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் அல்லது இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இப்போது கடந்த ஆண்டு நடந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களிலேயே போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை ஒருவாரம் முன்னதாக செப்டம்பர் 7 ஆம் தேதியே முடிக்க சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கும் பட்சத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் எஞ்சிய போட்டிகள் நடத்தப்படும்.
  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments