Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடுபிடிக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் ! தமிழக வீரருக்கு செம கிராக்கி

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (18:46 IST)
வருடம் தோறும் ஏப்ரல் - மே மாதங்களில் இந்திய மக்களுக்குப் பிடிக்கும் ஜூரங்களில் முக்கியமானது ஐபிஎல் ஜுரமாகும்.மாணவர்கள் தம் தேர்வுகளை எழுதிவிட்ட களைப்பில் ஜாலியாக உட்கார்ந்து நாள் முழுக்க அதிரடி விளையாட்டைக்  காணவும். பல நாட்டு அணிகள்  எல்லாம் கூட்டாஞ்சோறுபோலக் கலந்துகொண்டு விளையாடி  வரும் போட்டிகளால் மனதில் கவலைகள் மறந்து உற்சாகம் மீண்டு வரும்.
இந்நிலையில்  வருடம் தோறும் ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கும் போட்டிகளுக்கு டிசம்பர் மாதத்தில் ஏலம் நடப்பது வாடிக்கையாகும். அடுத்த வருடம் நடக்க இருக்கின்ற போட்டிகளுக்கு  ஜெய்பூரில் இன்று ஏலம் நடைபெற்று வருகிறது.
 
பல அணிகள் இடம்பெற்றுள்ள  ஐபிஎல் போட்டியில் அதன் உரிமையாளர்களுக்கு இடையே தற்போது  ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ரூ.8.40கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். யுவராஜ் சிங்கை எந்த அணியும் வாங்கவில்லை.விஹாரி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
 
வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மாவை சி.எஸ்.கே அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
 
நியூசிலாந்து அணி வீரர் காலின் இன்கிராமை டெல்லி அணி ரூ.6.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் ரூ.7.20 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்