10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 5-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை ஏலம் எடுக்கும் பணி இன்று பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது.
பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறுகிறது. இதில் அதிக தொகைக்கு ஏலம் செல்லும் வீரர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. துவக்க ஏலம் ரூ.2 கோடியிலிருந்து ஆரம்பம் ஆகும்.
தற்போது வரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இங்கிலாந்தின் இயோன் மோர்கன்-ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இலங்கை ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் ரூ.2 கோடிக்கும்,நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆன்டர்சன்-ரூ.1 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டார்.
தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.