Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்..பிசிசிஐ அதிரடி முடிவு?

Siva
வெள்ளி, 9 மே 2025 (12:15 IST)
ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் போர் பதற்றம் காரணமாக காரணமாக நிறுத்தப்பட இருப்பதாகவும்,
 
இது குறித்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஐபிஎல் தொடர் இதுவரை 58 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில்  வரும் 25ஆம் தேதியோடு லீக் போட்டிகள் முடிவடைந்து, அதன் பின் குவாலிபையர் போட்டிகள் தொடங்க உள்ளன.
 
இந்த நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட இருப்பதாகவும், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போர் பதற்றம் தணிந்ததும் மீண்டும் தொடங்கலாம் என்று திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில மணி நேரத்தில் பிசிசிஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

‘கண்ணுக்குக் கண் என்றால் உலகமே பார்வையற்றதாகிவிடும்’ –அம்பாத்தி ராயுடுவின் பதிவு!

தரம்ஷாலாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில் ஏற்பாடு!

ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

பதற்றமான சூழல். ஐபிஎல் தொடரைத் தள்ளிவைக்க பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments