Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியா? பரபரப்பு தகவல்

Advertiesment
ஐபிஎல்
, செவ்வாய், 10 மார்ச் 2020 (08:54 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி இம்மாதம் 29ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கும் நிலையில் இந்தப் போட்டித் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் தற்போது திடீரென எழுந்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி இருக்கும் காரணத்தினால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனை அடுத்து ஆயிரக்கணக்கானோர் கூடும் ஐபிஎல் போட்டியைரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளிவைக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே கருத்தை மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார் 
 
இந்த நிலையில் ஐபிஎல் தொடரை தள்ளி வைப்பதா? அல்லது ரத்து செய்வதா? என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை பார்வையாளர்கள் இல்லாமல் மைதானத்தில் நடத்தலாம் என்றும், போட்டியை தொலைக்காட்சி மற்றும் செயலிகள் மூலம் ஒளிபரப்பு செய்யும் வகையில் போட்டியை நடத்தினால் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இது குறித்து ஆலோசனை செய்து வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தபோதிலும், இந்த தகவலை பிசிசிஐ அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடப்பதற்கு சாத்தியமில்லை என்று பிசிசிஐ அதிகாரி உறுதி செய்துள்ளார். சமீபத்தில் நடந்த ஐஎஸ்எல் கால்பந்து அரைஇறுதிப்போட்டியில் 60,000 பேர் வந்ததாகவும் ஆனால் அங்கு கொரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லை என்றும் அவ்வாறு இருக்கும்போது ஐபிஎல் தொடர் போட்டிக்கு மட்டும் அச்சுறுத்தல் ஏற்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
இருப்பினும் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய மாநில அரசுகள் அனுமதி தராது என்றே கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதிக்கவில்லை எனில் வேறுவழியின்றி பார்வையாளர்கள் இல்லாமல் தான் ஐபிஎல் போட்டி நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று கூரப்படுகிறது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய தொடரில் கைகுலுக்க மாட்டோம் – மார்க் பவுச்சர் அறிவிப்பு !