இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த போட்டியில் பலநாட்டு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வதால் அந்நாட்டிலும் இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் இந்த போட்டியின் வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமையே பல கோடிக்கு வியாபாரம் ஆகும்
இந்நிலையில் கிரிக்கெட் போட்டியில் ஆர்வமில்லாத நாடுகளில் ஒன்றாகிய அமெரிக்காவிலும் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பாக உள்ளது.
14வது ஐபிஎல் போட்டியின் வெளிநாட்டு உரிமத்தை வில்லோ டிவி கைப்பற்றிய நிலையில் தற்போது அமெரிக்காவின் ஸ்லிங் டிவி, வில்லோவுடன் கைகோர்த்து முதல் முறையாக, அமெரிக்காவில் ஐ.பி.எல்., போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பவுள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது என்பதால் அமெரிக்காவில் ஐபிஎல் ஒளிபரப்பாவது உறுதியாகியுள்ளது.