Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

Siva
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (19:25 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ள இந்த போட்டிக்கு டாஸ் சற்று முன்பு நடைபெற்றது.

டாஸ் போட்டதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மகேந்திர சிங் டோனி தோல்வியடைந்தார். கொல்கத்தா அணியின் தலைவர் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பேட்டிங் செய்ய தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியின் இன்றைய பிளேயிங் லெவன் வருமாறு:

கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திருபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், ஜடேஜா, தோனி, அஸ்வின், அன்சுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது

கொல்கத்தா அணியின் இன்றைய பிளேயிங் லெவன் வருமாறு:

குவிண்டன் டி காக், வெங்கடேச ஐயர், ரஹானே, ரிங்கு சிங், சுனில் நரேன், ரஸல், ரந்தீப் சிங், வைபவ் அரோரா, மொயின் அலி, ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கேப்டனாக திகழும் தோனி, தனது லீடர்ஷிப் மூலம் சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வாரா என்பதை இன்றைய போட்டியின் முடிவில் காணலாம்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

110 கோடி ரூபாய் வருமானம் பெற்ற விளம்பர நிறுவனத்தைக் கழட்டிவிட்ட கோலி!

ஏன் அஸ்வினைக் கேப்டனாக நியமிக்கவில்லை… ரசிகர்களின் ஆதங்கக் குரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments