இந்திய அணியின் வெற்றிக்கு இதுதான் காரணம் !பாகிஸ்தான் கேப்டனையேப் பாராட்ட வைத்த விராட் கோலி !

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (07:31 IST)
இந்திய அணி தொடர்ச்சியாக பெற்று வரும் வெற்றிகளுக்குக் காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்திய உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. அதன் பிறகு எந்த ஒரு தொடரிலும் தோல்வி அடையாமல் சாதனைகளைக் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்போது வெளிநாட்டுத் தொடர்களிலும் சிறப்பாகக் கலக்கி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிகளைப் பாராட்டி அதற்குக் காரணமானவற்றை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பட்டியலிட்டுள்ளார். அவரது கருத்தின் படி ‘இந்தியா மிக சிறப்பான இரு பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரைப் பெற்றுள்ளது. ஆனால் அது மட்டுமில்லாமல் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் கண்டெடுத்துள்ளது. அதேப்போல இந்தியாவின் பவுலிங்கைப் பார்த்து எதிரணி பேட்ஸ்மேன்கள் அஞ்சுகின்றனர். இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணமாக நான் பார்ப்பது விராட் கோலியின் உடல்மொழி. ஆக்ரோஷமாக விளையாடும் அவர் மற்ற வீரர்களுக்கு உந்துதலாக இருக்கிறார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments