Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி, ரோஹித்தை பார்த்து திருந்துங்கடா.. பாகிஸ்தான் அணிக்கு இன்சமாம் அட்வைஸ்

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (18:12 IST)
வெளிநாட்டு தொடரில் எப்படி விளையாட வேண்டும், இக்கட்டான நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் என விராட் கோலி, ரோஹித் சர்மாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் தனது நாட்டின் அணி வீரர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார் 
 
நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக 20வது ஓவரை வீசிய ஷமி, மிக அற்புதமாக பந்துவீசி போட்டியை ’டை’ ஆக்கினார். அதன் பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரில் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையிலும் கொஞ்சம் கூட பதட்டப்படாமல் 2 சிக்சர்களை அடித்து ரோகித் சர்மா அசத்தினார்
 
விராட் கோலி தனது அணியை கூலாக கொண்டுபோன விதமும், பதட்டப்படாமல் ரோகித் சர்மா அடுத்த இரண்டு சிக்ஸர்களையும் குறிப்பிட்ட இன்சமாம் உல் ஹக், வெளிநாட்டு தொடரில் இப்படித்தான் விளையாட வேண்டும் அவர்கள் இருவரையும் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என தனது அணி வீரர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். மேலும் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

அடுத்த கட்டுரையில்
Show comments