Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடித் தோல்வி!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (17:36 IST)
ஒலிம்பிக் அரையிறுதி ஆட்டத்தின் இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடித் தோற்றது.

கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.

இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் பானு, பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கமும், பிவி சிந்து, பேட்மிண்டனில் வெணகலப் பதக்கமும் வென்று சாதித்தனர்.

தற்போது ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரவிகுமார் தாக்கியா அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதனால்  இப்போதைக்கு வெள்ளிப்பதக்க வாய்ப்பு பெற்றுள்ள அவர் தங்கப் பதக்கம் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய பெண்கள் ஹாக்கி அணி இன்றைய அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணியிடம் போராடித் தோற்றது. அர்ஜ்ண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றிச் சென்றது.

மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய பெண்கள் ஹாக்கி அணி விளையாட உள்ளது. இதில், இந்தியா வென்றால் வெண்கலப் பதக்கம் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments