Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி: குவியும் வாழ்த்துக்கள்!

indian women
, திங்கள், 12 டிசம்பர் 2022 (08:05 IST)
சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி: குவியும் வாழ்த்துக்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ளது. 
 
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய மகளிர் அணி 188 என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் சரியாக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது 
 
இதனை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.  இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ரன்கள் எடுத்தது ஆனால் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ரோஹித் சர்மா விலகல்