Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு

Advertiesment
WWC
, புதன், 26 ஜூலை 2017 (04:31 IST)
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இறுதிபோட்டியில் வெறும் 9 ரன்களில் கோப்பையை இழந்தாலும் இந்தியர்களின் மனதை வென்ற மகளிர் கிரிக்கெட் அணியினர் இன்று நாடு திரும்பினர்.



 
 
ஏற்கனவே மத்திய அமைச்சர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படும் என்று கூறியிருந்தபடியே அவர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்திய வீராங்கனைகளுக்கு மாலை, மரியாதைகள் செய்யப்பட்டு வாழ்த்தினர்.
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்று அனைவரும் அதிகபட்ச திறமையை வெளிப்படுத்தியதாகவும், அணியின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என்றும் கேப்டன் மிதிலா ராஜ் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா- இலங்கை முதல் டெஸ்ட் போட்டி நாளை துவக்கம்!!