Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 நாட்கள் தனிமைப்படுத்துதல்… இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (08:17 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட செல்லும் இந்திய வீரர்கள் 18 நாட்கள் தனிமைப்படுத்த பட உள்ளதாக சொல்லபப்டுகிறது.

இந்திய அணி இங்கிலாந்தில் இரு நாட்டு தொடரும் ஜுன் மாதம் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் விளையாட உள்ளது. அதற்காக இங்கிலாந்து செல்லும் வீரர்களின் தேர்வு இன்று நடக்க உள்ளது. வழக்கமாக 15 வீரர்கள் அனுப்பப்படும் நிலையில் இந்த முறை 20 வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என சொலல்ப்படுகிறது. ஏனென்றால் கொரோனா தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்கள் தேவைப்படும் என்ற முன்னெச்சரிக்கைக் காரணமாகவே என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. ஜூன் 18 ஆம் தேதி நியுசிலாந்து உடனான டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் மே 25 முதல் 8 நாட்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்த பட உள்ளனர். இந்த 8 நாட்களில் அவர்கள் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. அதன் பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு 10 நாட்கள் தனிமைப்படுத்துதல். இந்த 10 நாட்களில் பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதி உண்டு. மிக நீண்ட தொடர் என்பதால் வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments